logo
மாதிரி வாக்குப்பதிவு சரிபார்க்கும் பணி:  அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஈரோடு ஆட்சியர்  தொடங்கி வைத்தார்

மாதிரி வாக்குப்பதிவு சரிபார்க்கும் பணி: அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஈரோடு ஆட்சியர் தொடங்கி வைத்தார்

30/Jan/2021 06:45:21

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்  சிகதிரவன் மாதிரி வாக்குபதிவு சரிபார்க்கும் பணிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தபின் பின்னர் செய்தியாளர்கலிடம் மேலும் கூறியதாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சட்டமன்ற தேர்தல்  2021 நடைபெறவுள்ளதை யொட்டி, ஈரோடு இரயில்வே காலனி அரசு பள்ளியில் இருப்பு அறையில்  வாக்குப்பதிவு  இயந்திரங்கள் 4772,கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 3646, வாக்காளர் தான் யார் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம் 3938 என மொத்த வாக்குப்பதிவு எந்திரங்கள் 12362 வைக்கப்பட்டுள்ளதாகவும்  இன்று மாதிரி வாக்குப்பதிவு சரிபார்க்கும் பணிகள் தற்போது அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

 மேலும் இங்கு நடைபெற உள்ள மாதிரி வாக்குப்பதிவு சரிபார்க்கும்  பணிகளை இந்திய தேர்தல் ஆணையம், முதன்மை தேர்தல் அலுவலகம், மாவட்ட தேர்தல் அலுவலகம் ஆகியவற்றிலிருந்து வெப் காஸ்டிங் மூலம் கண்காணிப்படும் என்றார்.மொத்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் 1 சதவீதம் 1200 வாக்குகள் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும்.

அதேபோல் 2 சதவீதம் 1000 வாக்குகள் பதிவு செய்து மாதிரி வாக்குப்பதிவுகள் நடத்தப்படும். மேலும் 2 சதவீதம் 500 வாக்குகள் பதிவு செய்து மாதிரி வாக்குப்பதிவுகள் நடத்தப்படும். மாதிரி வாக்குப்பதிவுகள் முடிந்த பின் பாதுகாப்பு இருப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்படும் என்றார்.

Top