logo
கறம்பக்குடி அருகே கோயில் நிலத்தில் போடப்பட்ட குடிசைகள் அகற்றம்.

கறம்பக்குடி அருகே கோயில் நிலத்தில் போடப்பட்ட குடிசைகள் அகற்றம்.

24/Jun/2021 08:23:48

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் போடப்பட்ட குடிசைகளை வருவாய்த்துறையினர் அகற்றினர்.

 கறம்பக்குடி அருகேயுள்ள மயிலாடிதெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். அவர்களில் சிலர் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி நீண்டகாலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இதுவரை அவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்படவில்லையாம். இந்நிலையில், திருமணஞ்சேரி ஊராட்சி காத்தாயி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் 30 குடிசைகள் அமைத்து அப்பகுதி மக்கள் புதன்கிழமை இரவு குடியேறியுள்ளனர். இதுகுறித்து, கோயில் நிர்வாகிகள் அளித்த தகவலைத்தொடர்ந்து, அங்கு சென்ற கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமையிலான வருவாய்த்துறையினர், போலீஸார் குடிசைகள் அகற்றினர். அதற்கு குடியேறிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, வட்டாட்சியர் வீட்டுமனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, 30 குடிசைகளையும் வருவாய்த்துறையினர் அகற்றினர்.

Top