logo
வேளாண் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.54 லட்சம் கடனுதவி: அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் வழங்கினார்

வேளாண் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.54 லட்சம் கடனுதவி: அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் வழங்கினார்

03/Oct/2020 05:07:04

ஈரோடு:அந்தியூர் அடுத்துள்ள குருவரெட்டியூர் வேளாண் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் 63 நபர்களுக்கு 54.44 லட்சம் ரூபாய் மதிப்பிலான மத்திய கால கடனுதவிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி .கருப்பண்ணன் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற  மத்திய கால கடன் வழங்கும் நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் கலந்துகொண்டு  தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு பெண் கன்று வளர்ப்புக்காக 62 நபர்களுக்கு தால ரூ.87 ஆயிரம்வீதம் 53 லட்சத்து 94 ஆயிரமும், மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் என மொத்தம் 54 லட்சத்து 44 ஆயிரத்தை வழங்கிப் பேசுகையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் வழங்கும் கடன்கள் மற்றும் சலுகைகளை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.   தோனிமடுவு திட்டத்திற்கு விவசாயிகள் சார்பில் வழங்கப்பட்ட மனு தொடர்பாக முதலமைச்சரிடம் பேசி அத்திட்டத்தை நிறைவேற்ற விரைவில்ஏற்பாடு செய்வதாகவும் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Top