23/May/2021 08:50:33
சென்னை, மே: மறைந்த ஜூனியர் விகடன் புகைப்படக்காரர் சேலம் விஜயகுமார் குடும்பத்துக்கு உதவிட விகடன்நிர்வாகம் முன்வந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் பணியாற்றிய விகடன் புகைப்படக்காரர் விஜயகுமார் கொரோனா பாதிப்பால் திடீர் மரணமடைந்து விட்டார். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்துக்கு ஆறுதல் சொன்னதோடு, விஜயகுமார் கடைசியாக வாங்கிய சம்பளத் தொகையை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு ( உச்சவரம்பு 7.2 லட்சம்) அவரின் குடும்பத்துக்கு வழங்குவதாக எங்கள் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் அறிவித்துள்ளார்.
அத்துடன் விஜயகுமாரின் 2 குழந்தைகளுக்குமான கல்விச் செலவையும் (பள்ளியில் படிக்கும் குழந்தைகள் என்றால் 2 குழந்தைகளுக்கு தலா ஆண்டுக்கு 50,000 ரூபாய், கல்லூரியில் படிக்கும் குழந்தைகள் என்றால் 2 குழந்தைகளுக்கு தலா ஆண்டுக்கு 1,00,000 ரூபாய் ) 2 ஆண்டுகள் விகடன் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடைமுறை விகடனில் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று நிர்வாக இயக்குநர் அனைத்துப் பணியாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். பேரிழப்பை சந்தித்து இருக்கும் இந்த வேளையில் எங்கள் நிர்வாக இயக்குநரின் அறிவிப்பு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது.
இந்நேரத்தில் எங்கள் நிர்வாக இயக்குனருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். விகடனின் பணியாளர்கள் அனைவரும், விஜயகுமாரின் குடும்பத்துக்கு செய்ய வேண்டிய நிதி உதவி உட்பட அனைத்து உதவிகளையும் செய்யும் பணிகளைத் தொடங்கியிருக்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.