logo
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 3.35 லட்சம்  பேருக்கு கொரோனா பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 3.35 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

21/Jan/2021 10:33:10

ஈரோடு, ஜன:ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்துக் காணப் பட்டது. தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி, ஈரோடு மாவட்டம் முழுவதும் தினமும் 2,000 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் நோய் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதன் காரணமாக கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்  குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் மாவட்டத்தில்  இதுவரை 3 லட்சத்து 35 ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது.நோய்த்தொற்றை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Top