logo
புதுக்கோட்டை    ஸ்ரீ அன்னை கல்வி நிலையத்தில்  திருவள்ளுவர் தினம்

புதுக்கோட்டை ஸ்ரீ அன்னை கல்வி நிலையத்தில் திருவள்ளுவர் தினம்

17/Jan/2021 07:56:37

 புதுக்கோட்டைகீழ 6-ஆம்  வீதியிலுள்ள    ஸ்ரீ அன்னை கல்வி நிலையத்தில்  திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.

 கல்வி நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த   திருவள்ளுவர் படத்துக்கு  முதல்வர்  மணிகண்டன்   மற்றும் மாணவ, மாணவிகள்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  இதையொட்டி  முதல்வர் மாணவ,மாணவிகளுக்கு  திருக்குறள் நூலை வழங்கிப்  பேசுகையில்,    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் திருக்குறள் என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர்  திருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர். 

தன் அறிவாலும் மற்றும் சிந்தனையாலும் அவர் எழுதிய திருக்குறள், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாக மாறி, தமிழர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது என்று கூறினார். மாணவர் ஜனார்தனர் வரவேற்றார். இந்நிகழ்வில் மாணவ,மாணவிகள்  மற்றும்  பெற்றோர்கள்  ஸ்ரீகாந்தன் ,சிவகாமிஉள்ளிட்டோர் கலந்துகொண்டனர்  மாணவர்  நிரஞ்சன் நன்றிகூறினார். ஏற்பாடுகளை மாணவர்கள் மாரிமுத்து, திருமலைவாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Top