logo
   குடிமராமத்து மூலம் யு4 -பாசனசபை வாய்க்கால் பராமரிப்புக்கு ரூ.42 லட்சம் ஒதுக்கீடு செய்த அரசுக்கு விவசாயிகள் நன்றி

குடிமராமத்து மூலம் யு4 -பாசனசபை வாய்க்கால் பராமரிப்புக்கு ரூ.42 லட்சம் ஒதுக்கீடு செய்த அரசுக்கு விவசாயிகள் நன்றி

22/Nov/2020 05:41:27

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் பாரதி நகரில்   யு4 பாசனசபை சிறப்பு பொதுக்குழு, விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டத்தில்  இதற்கான  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கலிங்கியம் பாரதி நகரில்  யு4- கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபை சிறப்பு பொதுக்குழு மற்றும் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் தலைவர் கே.வி.சின்னசாமி தலைமையில் நடைபெற்றது.  பகிர்மானகமிட்டி தலைவர் தி.நடராசு முன்னிலை வகித்தார்.  இணைச் செயலார் ஏ.ரங்கசாமி வரவேற்று பேசினார்.  பொருளாளர் பி.காளியண்ணன் வரவு- செலவு அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில்  யு4- பாசனசபையின் செயலாளராக 28 ஆண்டுகளாக பணியாற்றிய சி.கே.ராஜு மறைவிக்கு கூட்டம் ஆழ்ந்த இரங்களை தெரிவிக்கிறது. யு4- பாசனசபையின் புதிய செயலாளராக சி.முத்துக்குமார் பணியாற்ற ஏகமனதாக தீர்;மானிக்கப்பட்டது. 

யு4 -பாசன சபைக்குட்பட்ட பிரதான வாய்க்கால் மைல் 29/7 முதல்  மைல் 33/0 வரையிலான பகுதிகளில் உள்ள அனைத்து மதகுகள், பிரிவு கிளை, உபகிளை வாய்க்கால்கள் அமைத்தல், முறையான மதகுகள், பாசனப்பரப்பு, குழாய் அளவு போன்ற விவரங்கள் எழுத வேண்டும் என பொதுப்பணித்துறையினரை  கேட்டுக்கொள்வது.  2020-2021-ஆம் ஆண்டு குடிமராமத்து திட்டத்திற்கு ரூ.42 லட்சம் ஒதுக்கீடு செய்து யு4 பாசனசபை மூலம் வாய்க்கால் பராமரிப்பு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கும் பொதுப்பணித்துறைக்கும் நன்றி தெரிவிப்பது.

 பொதுப்பணித்துறை நிலங்களுக்கு விவசாயிகள் சாகுபடி செய்யும் பகுதிகளுக்கு ஆண்டுதோறும் 10 சத குத்தகை உயர்த்தி எழுதுவதை ரத்து செய்யவும் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென  கேட்டுக்கொள்வது .  தற்போது பாசனப்பகுதிகளில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள 8 நாள் நீர்திறப்பு இரண்டு நாட்கள் நீர் நிறுத்தம் முறைப்பாசனத்தை நடைமுறையில்  தொடர வேண்டும். 

 கீழ்பவானி பாசனதிட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் கொப்பு வாய்க்கால்கள் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் சேதமடைந்து கடைமடைப்பகுதி வரை நீர் செல்லாமல் 10 முதல் 25 வரையிலான பாசப்பகுதி  நிலங்கள் பாதிக்கப்படுகிறது.  எனவே கொப்பு வாய்க்கால்கள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட  6 -க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

 கூட்டத்தில் நீரை சேமிக்க எளிய வழிகள் மற்றும் உணவு பற்றிய விழிப்புணர்வு தொகுப்புகளை கூட்டமைப்பு தலைவர் பொ.காசியண்ணன் வெளியிட பகிர்மான கமிட்டி தலைவர் தி.நடராசு, வேளாண்மை பொறியியல் துறை உதவிப்பொறியாளர் சி.சுப்பிரமணியம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 இதில் கூட்டமைப்பு துணை தலைவர் அ.ராமசாமி, செயலாளர் கி.வடிவேலு இணை செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி, பொருளாளர் ஆர்.ஈசுவரமூர்த்தி, மஞ்சள் விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சி.எம்.நஞ்சப்பன், பகிர்மானகமிட்டி தலைவர்கு.ரா.லோகநாதன் பொதுப்பணித்துறை பணி ஆய்வாளர் வெங்கடேசன், வேலுமணி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில்  துணைத் தலைவர் ஏ.எம்.நாகேசுவரன் நன்றி கூறினார்.

Top