logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் 228 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்: அமைச்சர் .சி.விஜயபாஸ்கர் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 228 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்: அமைச்சர் .சி.விஜயபாஸ்கர் வழங்கல்

22/Jan/2021 12:00:01

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், கீழக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் (21.01.2021)  நடைபெற்ற  விழாவில்  228  மாணவர்களுக்கு  அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மேலும் பேசியதாவது:

தமிழக  மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக வேறு எங்கும் இல்லாத வகையில் எண்ணற்ற திட்டங்களை பள்ளி கல்வித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது., மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்க உதவும் நோக்கில் 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் பயனாக, மாணவர்கள் எவ்வித சிரமமின்றி கல்வி கற்கக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.. 

அந்த வகையில், கீழக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 63 மாணவ, மாணவிகளுக்கு  அரசின் இலவச சைக்கிள்கள்  வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு பள்ளிகள் தொடர்ந்து தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதன்படி நடப்பாண்டில் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் வெள்ளையகவுண்டம்பட்டி, கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வி.கொத்தம்பட்டி, திருமயம் ஊராட்சி ஒன்றியம் புறகரைப்பட்டி ஆகிய கிராமங்களில் புதிதாக அரசு தொடக்கப் பள்ளிகள் திறக்க தற்போது அனுமதி வழங்கி அரசாணை பெறப்பட்டுள்ளது.  

இதேபோன்று ஆவுடையாh;கோவில் ஊராட்சி ஒன்றியம் முத்துக்குடா அரசு தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளியாகவும், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் கீழபழுவஞ்சி அரசு நடுநிலைப்பள்ளி உயா;நிலைப்பள்ளியாகவும், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் நல்லூh; அரசு உயா;நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாகவும் நடப்பாண்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.  

மேலும், அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகையில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, ஏழை மாணவர்களின் மருத்துவக்கனவு  நிறைவேற்றப்பட்டுள்ளது.  அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்ற 17 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது. இதனை அரசுப்பள்ளி மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

தமிழக அரசு வழங்கும் இதுபோன்ற விலையில்லா கற்றல் உபகரணங்களை பள்ளி நல்ல முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும்  என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்.

இதனை தொடர்ந்து,அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 165 மாணவர்க ளுக்கும் இலவச சைக்கிள்களை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ- பா.ஆறுமுகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார்,  அன்னவாசல் ஒன்றியக்குழு தலைவர் வி.ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் பி.சாம்பசிவம், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Top