logo
மினி கிளினிக்குகளில் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்கக்கோரி  பேராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது

மினி கிளினிக்குகளில் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்கக்கோரி பேராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது

08/Jan/2021 10:52:41

புதுக்கோட்டை, ஜன: மக்கள் நலன்கருதி தமிழக அரசு தொடங்கியுள்ள 2 ஆயிரம் மினி கிளினிக்குகளிலும் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்கக்கோரி வெள்ளிக்கிழமை  மருந்தாளுநர்கள் புதுக்கோட்டையில் மாநில அளவிலான உண்ணாவிரதப் பேராட்டத்தை நடத்தினர். உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுத்த போலீசார் 200 பேரை கைது செய்தனர்.

மக்கள் நலன்கருதி தமிழக அரசு தொடங்கியுள்ள 2 ஆயிரம் மினி கிளினிக்குகளிலும் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 780 மருந்தாளுநர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வட்டார மற்றும் மேம்படுத்தபட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மருந்து கிடங்குகளில் தலைமை மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

தலைமை மருந்தாளுநர், மருந்துகிடங்கு அலுவலர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாணை 180-யின்படி இழப்பீடு வழங்க வேண்டும். கொரோன தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்ப வாரிசுக்கு நிபந்தனையின்றி அரசு வேலையும் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.  அமைப்புச் செயலாளர் வே.விஜயகுமார் வரவேற்றார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துஐணத் தவைலர் இரா.மங்களபாண்டியன் தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உ.சண்முகம் பேசினார். 

கோரிக்கைகளை விளக்கி சங்க தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் டாக்டர் மு.அகிலன், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் ஆ.பெரியசாமி, மருந்தாளுநர் சங்க மாநில பொருளாளர் அ.விஸ்வேஸ்வரன் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் ஆர்.பன்னீர்செல்வம், ம.ப.விவேகானந்தன், நே.சுபின், பொன்.ஜெயராமன், ஆ.ரெங்கசாமி, சி.இளஞசியம், ஆர்.ரெங்கசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கொட்டும் மழையிலும் உண்ணாவிரதம் இருந்த மருந்தாளுநர்களுக்கு போலீசார் அனுமதிதர மறுத்தனர். தொடர்ந் போராட்டத்தை முன்னெடுக்க இருந்த 55 பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Top