logo
இங்கிலாந்திலிருந்து ஈரோட்டுக்கு வந்த 19 பேருக்கு கொரோனா தொற்று இல்லை:சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

இங்கிலாந்திலிருந்து ஈரோட்டுக்கு வந்த 19 பேருக்கு கொரோனா தொற்று இல்லை:சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

26/Dec/2020 06:23:42

ஈரோடு, டிச: இங்கிலாந்து நாட்டில் உருமாறி உள்ள புதிய கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இது சாதாரண கொரோனா தொற்றை விட வீரியம் மிக்கதாக இருப்பதாக சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து இங்கிலாந்துடனான விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

அதன்படி, இங்கிலாந்து  நாடுகளில் இருந்து கடந்த 15-ஆம் தேதிக்கு பிறகு ஈரோட்டுக்கு வந்த 22 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களை சுகாதாரத்துறையினர் வீடுகளில் தனிமைப் படுத்தி தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

 மேலும் 22 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதல்கட்டமாக 14 பேரின் முடிவுகள் வெளிவந்தது. இதில்  14 பேருக்கும் கொரோனா தொற்று எதுவும் இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். மீதமுள்ள 8 பேரில் ஒருவர் கேரளா, ஒருவர் சென்னை, ஒருவர் நீலகிரிக்கு சென்று விட்டனர். இவர்கள்  குறித்த தகவல் அந்தந்த சுகாதார துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை சுகாதாரத் துறையினர் வீடுகளில் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்ட் அம்மாள் கூறியதாவது:  மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு பேரில் இங்கிலாந்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு அவர்கள் அடையாளம் காணப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை 22 பேர் ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார துறையினர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கோரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 இதில் வெள்ளிக்கிழமை  வரை 14 பேருக்கு  தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள் ளது.மீதமுள்ள  8  பேரில்  ஒருவர் சென்னைக்கும், ஒருவர் கேரளாவுக்கும், ஒருவர் நீலகிரிக்கும் சென்றுவிட்டனர். இவர்கள் பற்றிய விவரங்களை அந்தந்தப் பகுதிகளின் சுகாதார துறையின ருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். சுகாதார துறையினர் அவர்களை தீவிரமாக கண்காணித் து வருகின்றனர்.ஈரோட்டில் தங்கியுள்ள மீதமுள்ள 5 பேரின் முடிவுகள்  வந்தது. இதில் 5 பேருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும் 14 நாட்களுக்கு  அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றார்.

Top