logo
வெளிமாநில லாரி, வேன் டிரைவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்: மாநகராட்சி அறிவிப்பு

வெளிமாநில லாரி, வேன் டிரைவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்: மாநகராட்சி அறிவிப்பு

15/Jun/2021 07:10:49

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்துக்குள் வருகின்ற வெளிமாநில லாரி, வேன் ஓட்டுனர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் என ஈரோடு மாநகராட்சி அறிவித்துள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக ஈரோடு  . .சி பூங்கா பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக ஈரோடு பேருந்து  நிலையத்தில்  செயல்பட்டு வருகிறது. தினமும் பல்வேறு மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து  மாநகராட்சி சார்பில் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது.

இந்நிலையில், வெளியிலிருந்து ஈரோடு மாவட்டத்துக்கு காய்கறி கொண்டு வரும்  வெளி மாநில லாரி, வேன் ஓட்டுனர்கள், கிளீனர்கள் மூலமாக கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் இவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்று இருந்தால் மட்டுமே காய்கறி மார்க்கெட்டுக்குள் அனுமதிக்க முடியும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகரில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர, ..சி. பூங்கா மைதானத்தில் நடந்து வந்த தினசரி, காய்கறி சந்தை மூடப்பட்டது. மொத்த வியாபாரம் மட்டும்  பேருந்து  நிலைய  வளாகத்தில் நடந்து வருகிறது. தள்ளுவண்டி, நடமாடும் காய்கறி வண்டிகளில் விற்பனை செய்வோர் மட்டும் மாநகராட்சி அனுமதியுடன் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் சமீபத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அது போல், ஆந்திரா, கர்நாடாக மாநிலம் பகுதிகளில் இருந்து, வரும் வெளி மாநிலங்களில் லாரிகள் மூலம் காய்கறிகள் கொண்டு வரும் ஓட்டுனர்கள், கிளீனர்களுக்கு இங்கு கொரோனா பரிசோதனை செய்வதில் சிக்கல் உள்ளது.

 காரணம் இங்கு கொரோனா பரிசோதனை எடுக்கும் வெளி மாநில நபர்களுக்கு பாசிடிவ் என முடிவு வந்தால் அவர்களை எப்படி கண்டறிந்து தனிமைபடுத்துவதில் நடைமுறைச்சிக்கல் உள்ளது

அதனால் வெளிமாநிலத்தில் இருந்து ஈரோடு மார்க்கெட்டுக்கு காய்கறி கொண்டு வரும், லாரி மற்றும் வேன் ஓட்டுனர்கள், கிளீனர்கள் அவர்கள் சொந்த ஊரில் கொரோனா பரிசோதனை செய்து, நெகடிவ் என சான்று கொண்டு வந்தால் மட்டுமே மார்க்கெட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இது குறித்து வெளிமாநில லாரி, வேன் ஓட்டுனர்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது. இதன் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறோம்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த எத்தனை வழிகள் உண்டோ அவை தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது என்று  அவர்கள் கூறினர்.

Top