logo
பாஜக சார்பில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா.

பாஜக சார்பில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா.

25/Dec/2020 07:20:28

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் பாஜக இளைஞரணி சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  புளிச்சங்காடு கைகாட்டியில், திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய பாஜக இளைஞர் அணி சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில், திருவரங்குளம் கிழக்கு இளைஞர் அணித் தலைவர் ராம்குமார், துணைத் தலைவர் அஜித் குமார், பொதுச்செயலர் வசந்த், நெசவாளர் பிரிவுத் தலைவர் கார்த்திக் , மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஸ்வாமி, மாவட்ட பிரச்சார அணியின் துணைத் தலைவர் அழகப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Top