09/Dec/2020 07:11:36
புதுக்கோட்டை மாவட்டம்,
ஆலங்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு சட்டப்பேரவை
உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கி புதன்கிழமை ஆறுதல் கூறினார்.
ஆலங்குடி கேவிஎஸ் தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ் மகள்
ஸ்வேதா(13). 8-ம் வகுப்பு பயின்றுவந்த மாணவி டிச.4-ம் தேதி வீட்டு மாடியின் அருகே சென்ற
மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்நிலையில், அவரது வீட்டிற்கு
சென்ற ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் அவரது குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார். திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.