logo
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

26/Sep/2020 03:42:35

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.


Top