logo
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வாசலில் கேட்பாரற்று கிடந்த சடலம் – ஒரு மாதத்தில் மருத்துவமனை சுற்றி  5 சடலங்கள் மீட்பு:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வாசலில் கேட்பாரற்று கிடந்த சடலம் – ஒரு மாதத்தில் மருத்துவமனை சுற்றி 5 சடலங்கள் மீட்பு:

25/Dec/2020 12:55:21

மதுரை-டிச: தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்கக்கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தென் மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில், இங்கு சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் உறவினர் இல்லாத காரணத்தினாலும் உறவினர்கள் விட்டு செல்வதாகவும் சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவமனை சுற்றியே தங்கியிருப்பது வழக்கம். இந்த நிலையில், கடுமையான குளிரின் காரணமாக மருத்துவமனை வாசலில் தங்கியிருந்த அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.இந்த நிலையில், உயிரிழந்த அவரது உடலானது மருத்துவமனை வாசலிலேயே சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக கேட்பாரற்று கிடந்ததுள்ளது.

மேலும், காவல்துறைக்கு முறையாக தகவல் கொடுக்காத காரணமாகவே , உடலை அப்புறப்படுத்துவது தாமதம் ஏற்பட்டதாகவும் இறந்தவர் யார்? என்பது குறித்தும் சிகிச்சைக்காக வந்தவரா? என்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ,கடந்த ஒரு மாதத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சுற்றி உள்ள சாலை ஓரங்கள் குப்பைத் தொட்டிகள் சாக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் ஐந்திற்கும் மேற்பட்ட முதியவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Top