logo
ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியில்  சாலையோர ஆக்கிரமிப்பு  கடைகள் அகற்றம்

ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

18/May/2021 07:38:04

ஈரோடு, மே:ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியில் சாலையோர  ஆக்கிரமிப்பில் இருந்த  கடைகள் அகற்றி மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக  ஈரோடு  வ .உ .சி .பூங்கா காய்கறி மார்க்கெட்டில் காலை 6 மணி முதல் 7 மணி வரை மட்டுமே சில்லரை விற்பனை நடக்கிறது. அதன் பிறகு மார்க்கெட் அடைக்கப்படுகிறது. இதனால் சில்லரை வியாபாரிகள் கொங்கலம் மன் கோவில் வீதியில் சாலையோரம் கடைகளை அமைத்தனர். மக்கள் அதிக எண்ணிக்கை யில் வருவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. 

இதையடுத்து மாநகராட்சி இரண்டாவது மண்டல அதிகாரிகள்  கோயில் வீதியில் சாலையோ ரம் ஆக்கிரமித்து  போட்டப்பட் டிருந்த  காய்கறி கடைகளை அகற்றினர்.சாலையின் இருபுற மும்  தடுப்புகளை வைத்து அடைத்தனர். அதைத் தொடர்ந்து  கொங்கலம்மன் வீதியில் செயல்பட்டு வந்த ஆக்கிரமிப்பு நடைபாதை கடைகளை மாநகராட்சி  பணியாளர்கள் அகற்றினர்.

இதில் 20- க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு  பொருட்களை தனியாக வண்டியில் போட்டு எடுத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 


Top