logo
திருமயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து  வேட்பு  மனு தாக்கல்

திருமயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து வேட்பு மனு தாக்கல்

15/Mar/2021 06:09:00

புதுக்கோட்டை, மார்ச் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற  தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிரங்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவர் பி.கே. வைரமுத்து  திருமயம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

இதையடுத்து,  திருமயம் பேருந்து நிலையத்தில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து பேசுகையில்,  அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத்தில் உள்ள  ஒருவருக்கு அரசு வேலை, குடும்ப அட்டைதாரர்களுக்கு வாசிங் மிஷின், ஆண்டுக்கு 6  சிலிண்டர் கல்விக் கடன் ரத்து போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்துள்ளது. 


அதிமுக அரசு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர வைக்க அதிமுகவை  வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதேபோல் திருமயம் தொகுதி மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் அதிமுக சார்பில் போட்டியிடும் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பாதம்பணிந்து வேண்டுகிறேன் என்றார்.

Top