logo
ஆலங்குடி தொகுதியில் ஏர் கலப்பையை ஏந்தியவாறு வேட்பு மனு அளித்த நாம்தமிழர் கட்சி வேட்பாளர்

ஆலங்குடி தொகுதியில் ஏர் கலப்பையை ஏந்தியவாறு வேட்பு மனு அளித்த நாம்தமிழர் கட்சி வேட்பாளர்

17/Mar/2021 11:14:37

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி நாம்தமிழர் கட்சி வேட்பாளர் திருச்செல்வம் ஏர்கலப்பையுடன் கட்சியினருடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஆலங்குடி தொகுதி நாம்தமிழர் கட்சி வேட்பாளர் சி.திருச்செல்வம். இவர், புதன்கிழமை ஏராளமான நாம்தமிழர் கட்சியினருடன் ஏர்கலப்பையைச் சுமந்தவாறு ஊர்வலமாகச் சென்று, ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அக்பர் அலியிடம் வேட்பு மனு அளித்தார். நிகழ்வில், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Top