21/Dec/2020 10:12:49
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் பொது சுகாதாரத்துறை மற்றும் சிவிபி அறக்கட்டளை சார்பில் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமையில் நடத்தப்பட்ட கண் பரிசோதனைக்கான ஒளிமயமான வாழ்வு முகாமினை துவக்கி வைத்த அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்பார்வை குறைபாடு உடையவா;களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தவும், கிராமங்கள் தோறும் பொதுமக்களின் இருப்பிடத்திற்கு நேரடியாக சென்று விலையில்லாமல் சிகிச்சை அளிக்கும் வகையில் கண் பரிசோதனைக்கான ஒளிமயமான வாழ்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் இதுவரை 36 முகாம்கள் நடத்தப்பட்டதில் 5,611 நபர்களுக்கு கண் கண்ணாடி தேவையெனவும், 1,349 நபர்களுக்கு கண் அறுவை சிகிச்சை தேவையெனவும் கண்டறியபட்டது. இதனை தொடர்ந்து தற்பொழுது வரை சுமார் 1500 -க்கும் மேற்பட்ட நபர்களுக்கு விலை உயர்ந்த தரமான கண் கண்ணாடிகளும், 180 நபர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
விராலிமலை ஊராட்சி ஒன்றியம், வேலூர், அக்கல்நாயக்கன்பட்டி, பாத்திமாநகர், குன்னத்தூர், மதயானைப்பட்டி ஆகிய கிராமங்களில் கண் பரிசோதனைக்கான ஒளிமயமான வாழ்வு முகாம்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் கலந்துகொண்டுள்ள பொதுமக்களுக்கு கண் சம்மந்தமான அனைத்து பாpசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒளிமயமான வாழ்வு முகாம்களால் பொதுமக்களின் இருப்பிடங்களிலேயே கண் சிகிச்சை பெற வழிவகை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
இம்முகாமில் முன்னாள் அமைச்சர்கள் என்.சுப்பிரமணியன், என்.ஆர்.சிவபதி, பொது சுகாதாரத் துணை இயக்குநர் பா. கலைவாணி,சிவிபி அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.