21/Sep/2020 05:02:58
புதுக்கோட்டையில் திமுக மருத்துவரணி அணி சார்பில் கிராமிய இசைக்கலைஞர்களுக்கு திங்கள்கிழமை(21.9.2020) நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரில் நகர செயலாளர் க. நைனாமுகமது தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக மருத்துவரணி வடக்கு மாவட்ட அமைப்பாளர் டாக்டர் முத்துராஜா கலந்து கொண்டு கிராமிய இசைக்கலைஞர்கள் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். இதில், நிர்வாகிகள் அப்துல்லா,பாலசுப்பிரமணியன்,பாண்டியராஜ்,முத்தலீப் சண்முகம்,அகமதுபாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சந்திரசேகரன் வரவேற்றார்.வட்டசெயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்