logo
 கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில் ரூ.62.77 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில் ரூ.62.77 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

18/Dec/2020 09:28:48

ஈரோடு-டிச:  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நம்பியூர்; அருண் மஹாலில், மாவட்ட ஆட்சியர்      சி.கதிரவன்  தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளிக்கல்வி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று  547 பயனாளிகளுக்கு ரூ.62.77 லட்சம் மதிப்பிலான அரசின்  பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

நிகழ்வில் பங்கேற்ற, பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியாதாவது: இப்பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கு 10 கணினியும், மேல்நிலைப்பள்ளிக்கு 10 கணினியும் இணையதள வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியர் அலுவலகம் புதிதாக  அமைக்கப்பட்டுள்ளது. நம்பியூர் பகுதியில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டு தற்பொழுது 2-ஆவது ஆண்டாக மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் வகையில், நம்பியூர் பகுதியில் 528 வீடுகளும், எலத்தூர் பகுதியில் 696 வீடுகளும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

இந்நிகழ்ச்சியில், 102 பயனாளிகளுக்குரூ.6,12,000 மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 105 பயனாளிகளுக்கு ரூ.12,60,000 மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகையினையும், 316 பயனாளிகளுக்கு  ரூ.37,92,000 மதிப்பீட்டில் புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 8 பயனாளிகளுக்கு ரூ.40,000 மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும், ஒரு பயனாளிக்கு ரூ.1,00,000  மதிப்பீட்டில் முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதிக்கான காசோலை.

 2 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவைச் சான்றுகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1,50,626/-  மதிப்பீட்டில் வீரிய காய்கறி பரப்பு விரிவாக்கம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் உபகரணங்களையும், வேளாண் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ,1.24.500 மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்களையும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,85,865/- மதிப்பீட்டில் பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12,609/- மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள்  என மொத்தம் 547 பயனாளிகளுக்கு ரூ.62,77,600 மதிப்பிலான  அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 


Top