logo
ரஜினிகாந்த பிறந்த நாள்:  ரஜினி மக்கள் மன்றத்தினர் ரத்த தானம்

ரஜினிகாந்த பிறந்த நாள்: ரஜினி மக்கள் மன்றத்தினர் ரத்த தானம்

12/Dec/2020 09:45:11

ஈரோடு- டிச: நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவை  ஈரோடு மாவட்டம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்தினர் ரத்ததானம், கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்ட தலைவர் பைக் ஏ.முருகேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் எம்.சாம்ராஜ் முன்னிலையில்  ஈரோடு அரசு மருத்துவமனையில் ரத்தான முகாம் நடந்தது. இதில் மன்ற உறுப்பினர்கள்  பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். 

அதைத்தொடர்ந்து சூரம்பட்டி வலம்புரி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. பின்னர் சாஸ்திரிநகரில் உள்ள நெரி பவுண்டேசன் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கும், என்.எல். கருணை இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன. 

பின்னர் மணல்மேடு பகுதியில் மன்ற கொடி ஏற்றி வைக்கப்பட்டது. மேலும் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி ஈரோடு சூரம்பட்டி, திருநகர்காலனி, மேட்டூர் ரோடு உள்பட பல்வேறு இடங்களில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் மாநகர செயலாளர் ஜி.ராஜா மோகன்ராஜ், இணைச்செயலாளர் வி.ஜி.சண்முகம், துணைச்செயலாளர் கே.எஸ்.ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆனந்த கிருஷ்ணன், ஆர்.கிஷோர்குமார், மண்டல செயலாளர்கள் வெங்கட்ரமணன், ராஜா குணசேகரன், முத்துக்குமார், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். 


Top