logo
ஈரோட்டில்   தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்:  டாக்சி - ஆட்டோக்கள் இயக்கம்

ஈரோட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்: டாக்சி - ஆட்டோக்கள் இயக்கம்

14/Jun/2021 07:31:06

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில்   தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்டாக்சி - ஆட்டோக்கள் இயங்கத்தொடங்கின.

 தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது  அலையின் தாக்கம் வேகமெடுத்தது. தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. பொதுப் போக் குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

ஜவுளி கடைகள்தொழில் நிறுவனங்கள் ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள், தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளனஅரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று முதல் வரும் 21-ஆம் தேதி வரை தளர்வுகள் உடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, கோவை ,சேலம் உள்பட பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு  ஏற்கனவே காய்கறி, மளிகை கடை இறைச்சிக்கடைகள் காலை முதல்  மாலை வரை இயங்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளதுஇந்நிலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில்டாக்ஸி ஆட்டோ திங்கள்கிழமை இயங்க தொடங்கியது. டாக்ஸியில் ஓட்டுனர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோவில் ஓட்டுனர் தவிர இரண்டு பயணிகளும் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசின் பாதுகாப்பு வழிமுறைகளுடன்  ஈரோடு மாவட்டத்தில் ஆட்டோ டாக்ஸி இயங்கத் தொடங்கியது. இதைப்போல் வாகன பழுதுபார்க்கும் கடைகள் காலை 9 முதல் மதியம் இரண்டு முறை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் எலெக்ட்ரிசியன்கள், பிளம்பர்கள், மோட்டார் எந்திரம் பழுது பார்க்கும் மெக்கானிக்குகள் மதியம் வரை பழுது பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தன. வேளாண் உபகரணங்கள், பம்புசெட்டு பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்பட தொடங்கியது. இதேபோல் ஏற்றுமதி நிறுவனங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் 25 சதவீத ஊழியர்களுடன்  பணியமர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

Top