logo
கோபியில் நடைபெறும் ஏர்கலப்பை பேரணியில் திரளாக பங்கேற்க  ஈரோடு மாவட்ட காங்கிரஸ் வேண்டுகோள்

கோபியில் நடைபெறும் ஏர்கலப்பை பேரணியில் திரளாக பங்கேற்க ஈரோடு மாவட்ட காங்கிரஸ் வேண்டுகோள்

05/Dec/2020 05:22:53

ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மூலப்பட்டறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண்  சட்டங்களை திரும்ப பெற வேண்டும். ஈரோட்டில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஈரோடு மாநகர் பகுதியில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளை  போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். கோபியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறவுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக ஏர் கலப்பை பேரணியில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மண்டல தலைவர் ஜாபர் சாதிக், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, நெசவாளர் அணித் தலைவர் மாரிமுத்து, சேவா தள தலைவர் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்பப் பிரிவு விஜய், மாநில எஸ்சி பிரிவு துணைத் தலைவர் ராஜேந்திரன், பொதுச் செயலாளர்கள் கனகராஜ்,  வின்சென்ட், சச்சிதானந்தம், வட்டார தலைவர் நடராஜ், கே.என். பாட்ஷா உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Top