logo
ஈரோடு மாவட்ட சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதி

ஈரோடு மாவட்ட சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதி

05/Dec/2020 05:15:13

ஈரோடு: பாபர் மசூதி இடிப்பு நாளான டிசம்பர் 6-ஆம் தேதியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  கருங்கல்பாளையம் சோதனை சாவடியில்  2 ஆய்வாளர்கள் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சநிக்கிழமை அதிகாலை முதலே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் நாமக்கல் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர பரிசோதனை செய்த பிறகே ஈரோட்டிற்குள்  அனுமதிக்கப்படுகின்றன.  குறிப்பாக கார்களில் வரும் பயணிகள் வாகனங்கள் நிறுத்தி உடைமைகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

 இதேபோல், பவானி லட்சுமி நகரில் உள்ள சோதனைச் சாவடி, விஜய மங்கலத்தில் உள்ள சோதனை சாவடி, நொய்யல் ஆற்றில் உள்ள சோதனைச், பர்கூர் சோதனை சாவடி, பண்ணாரி அம்மன் சோதனைச்சாவடி உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடியில் போலீசார் 24 மணி நேரமும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சோதனை சாவடியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இது தவிர பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஈரோடு கருங்கல்பாளையம், காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பார்க் ,பஸ் நிலையம், மணிக்கூண்டு ஜி.ஹெச் ரவுண்டானா, ரெயில் நிலையம் போன்ற பகுதியில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் ஈரோடு ரயில் நிலையத்திலும் போலீசார்

பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் உடமைகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ரயில்வே போலீஸார் ரயில்  நடைமேடைகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் காவிரி இரும்பு பாலத்தில் ரயில்வே போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.


Top