logo
வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம் விதிப்பு

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம் விதிப்பு

05/Dec/2020 04:44:42

ஈரோடு:  ஈரோடு  மாவட்டம், அந்தியூர் அருகே வனவிலங்குகளை சுருக்கு கம்பிகளை வைத்து வனவிலங்குகளை வேட்டையாட  முயன்ற 3 பேருக்கு தலா ரூ. 17 ஆயிரம் வீதம்  மொத்தம் ரூ. 51 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்குட்பட்ட அத்தாணி மேற்கு பகுதியில் கொம்பு தூக்கி மாரியம்மன் கோவில் அருகில் 3 பேர்  சுருக்கு கம்பிகளை வைத்து வன விலங்குகளை  வேட்டையாட முயல்வதாக அந்தியூர் வனச்சரக அதிகாரி உத்தரசாமிக்கு ரகசிய  தகவல் கிடைத்தது

 அதன் அடிப்படையில் வனச்சரக அதிகாரி உத்தரசாமி மற்றும் அத்தாணி மேற்கு பீட் வனவர்கள் ஸ்ரீதேவி சசிகலா கேசவமூர்த்தி மற்றும் வனத்துறையினர் அந்த பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மைக்கேல் பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜா.மூர்த்தி.  பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த மாதையன். ஆகிய மூவரும் சுருக்கு கம்பிகளுடன் வனப் பகுதியில் இருந்தது கண்டறியப்பட்டது. அவர்களை  உடனடியாக அவர்களை சுற்றிவளைத்து வனத்துறையினர் கைது செய்து அந்தியூர் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்

 அப்பொழுது அவர்கள் மாமிச உண்ணிகள் சாப்பிட்ட பின்பு விட்டுச்சென்ற கறியை எடுத்துவந்த சமைத்தது சாப்பிட்டதும் பின்பு வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதையும் ஒப்புக்கொண்டனர்

 பின்னர் இதுகுறித்து மாவட்ட வன அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது மாவட்ட அதிகாரி விஷ்மிஜு விஸ்வநாதன் உத்தரவின் பேரில் 3 பேருக்கும் தலா ரூ. 17 ஆயிரம்  வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து  வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Top