logo
பள்ளி, கல்லூரிகளை திறக்க  இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

பள்ளி, கல்லூரிகளை திறக்க இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

11/Jan/2021 09:20:20

புதுக்கோட்டை, ஜன: மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முறையான சுகாதார வசதியை மேற்கொண்டு பள்ளி கல்லூரிகளை திறக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய மாணவர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் தலைமையில் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கார்த்திகாதேவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் நித்தீஸ், சந்தோஷ் உள்ளிட்டோர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ள விவரம்:

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து முழு ஊரடங்கு அமல்பட்டது. ஆனால், தற்பொழுது ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர். மதுபானக் கடையிலிருந்து திரையரங்கம், கோயில் திறப்பு உள்ளிட்ட பொது நிகழ்;சிகளுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் மத்திய, மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளை மட்டும் இதுநாள் திறக்கப்படாததன் காரணம் என்ன? இணையவழிக் கல்வி என்பது கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. அவர்கள் கல்வியை விட்டு விலகி பல்வேறு வேலைகளுக்கு தள்ளிவிடும் சூழலை அரசே ஏற்படுத்திக் கொடுக்கும் நிலை உள்ளது.

எனவே, பள்ளி, கல்லூரிகளையும், விடுதிகளையும் திறப்பதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் பள்ளி வளாகத்தில் நோய்த்தொற்று ஏற்படாதவாறு முறையாக சுகாதார வசதிகளையும் அரசு முறையாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Top