logo
முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

03/Jan/2021 10:08:48

புதுக்கோட்டை:  முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்;ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்  வழங்கப்பட உள்ளது. இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற விரும்புவோர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும்   இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டவராகவும்  கைகளால் வாகனத்தின் கட்டுப்பாடுகளை நன்கு இயக்க முடிந்தவராகவும் இருக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட தகுதிகள் கொண்ட முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கள் தங்களது மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை (அனைத்து பக்கங்களும்) உணவுப்பொருள் வழங்கல் அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் அட்டை நகல்கள் மற்றும் பாஸ் போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் புதுக்கோட்டை மாவட்ட

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில்; 04.01.2021-க்குள் விண்ணப்பித்து பயனடை யலாம். மேலும்  விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் 04322-223678 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Top