03/Dec/2020 03:44:23
ஈரோடு: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது தாய்மாமன் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மைக்கேல்பாளையத்தை சேர்ந்தவர் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் சூளை ராஜா. இவரது தகப்பனார் கருப்பகவுண்டர் நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார்.
மரணமடைந்த கருப்பகவுண்டர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாளின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். இந்நிலையில், நேற்று காலை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது தாய்மாமனின் தூக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சூளை ராஜா குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
இவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், அந்தியூர் எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்