logo
படிக்க வசதி வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கு உதவி செய்ய காத்தி்ருக்கும்  தொண்டுள்ளம் கொண்டோர்

படிக்க வசதி வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கு உதவி செய்ய காத்தி்ருக்கும் தொண்டுள்ளம் கொண்டோர்

27/Jun/2021 11:09:15

புதுக்கோட்டை,ஜூன் உயர் கல்வி பயில வசதி வாய்ப்பு இல்லாத மாணவர்கள்  உதவி செய்ய காத்திருக்கும்  தொண்டுள்ளம் கொண்டவர்களை  அணுகி பயன் பெறலாம்.

கொரோனா வைரஸ் மக்களின் வாழக்கை முற்றிலுமாக புரட்டி போட்டுவிட்டது. பொருளாதார ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டு, வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். கடந்த ஆண்டைப் போல நிகழ் ஆண்டிலும்  பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் எடுக்கப்பட்.

10 மற்றும் 12-ஆம்  வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அந்த வகுப்புகளுக்கான மதிப்பெண் வழங்கும் வழிமுறைகளை தமிழக தற்போது வெளியிட்டிருக்கிறது. ஜூலை 31 -ஆம் தேதிக்குள்  அரசு தேர்வுதுறை இணைய தளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இது ஒரு புறமிருக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. பொறியியல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதவாக்கில்  தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

இந்நிலையில் படிக்க ஆசையிருந்தும் ஏழ்மையால்  அந்த வாய்ப்புக்கிடைக்காமல் தவிக்கும்  மாணவர்களின் நிலை மிகவும் வேதனையானது. அவர்களது படிக்கும் திறமையை மதிப்பிட்டு  படிக்க வைக்க பல்வேறு நல்ல உள்ளங்கள் காத்திருக்கின்றன என்ற்  ஆறுதல் தரும் செய்தி உங்கள் பார்வைக்கு.

இது தொடர்பாக கல்வியாளர் பேராசிரியர் எஸ். விஸ்வநாதன் கூறியதாவதுஇந்தியாவில் உள்ள 130 கோடி மக்களில் 37 கோடி பேர் இன்னும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர். உணவு கிடைப்பதே சிரமம் என்ற நிலையில் உள்ள இவர்களால் தங்கள் குழந்தைகளை எப்படி படிக்க வைக்க முடியும்.

 37 கோடியில் ஒரு சதவீதத்தினராவது படித்து முன்னேறி குடும்பத்தின் வறுமையை ஒழித்தால் அதுவே அவர்கள் கற்ற கல்விக்கு பெருமை. கல்வி மூலம் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும். கல்வி செல்வம் இருந்தால் வேறு எந்த செல்வமும் தேவையில்லை. யாரைக் கண்டும் பயப்படத் தேவையில்லை.

திறமை இருந்தும் வறுமை காரணமாக ஏராளமானோர் படிப்பை தொடர முடியாமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். இது போன்ற ஏழை மாணவ மாணவியருக்கு  நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேஷன் தொடங்கி பல்வேறு சேவை அமைப்புகள் தத்து எடுத்து படிக்க உதவி செய்து வருகின்றனர்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்கு படித்து உயர் பதவிகளை அடைய வேண்டும். அதன் பின் இதே போல் படிக்க முடியாமல் சிரமப்படுபவர்களை தத்து எடுத்து படிக்க வைக்க வேண்டும் என்றார் அவர்.

Top