04/Apr/2021 09:55:49
புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஏப்ரல்- ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தாக்கம் தீவிரமாகாமல் தடுத்திட மேற்கொள்ள வேண்டிய முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், பொதுமக்கள் அதிகமுள்ள இடங்களுக்கு செல்லாமல் தவிர்த்தல், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் செல்வதை தவிர்த்தல் போன்றவற்றை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு பொது சுகாதாரச்சட்டம் 1939-இன் படி முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத தனிநபருக்கு ரூ.500-ம், நிறுவனங்களுக்கு ரூ.5,000ம் அபதாரம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள் கொரோனா தற்காப்பு முறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தகுதியுள்ள அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இணைநோய் இல்லாதவர் களுக்கும் கொரோனா தடுப்பூசி அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படும். மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் ரூ.250 கட்டணத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.