logo
புதுக்கோட்டை நகராட்சியில் ரூ.1.80 கோடியில் புதிய நீர்த்தேக்கத்தொட்டிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கல்

புதுக்கோட்டை நகராட்சியில் ரூ.1.80 கோடியில் புதிய நீர்த்தேக்கத்தொட்டிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கல்

02/Dec/2020 12:33:07

புதுக்கோட்டை நகராட்சி, 41-ஆவது வார்டு கேஎல்கேஎஸ் நகரில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமையில், வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து  முன்னிலையில்    நடந்த நிகழ்வில் புதிதாக கட்டப்படவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து அமைச்சர் கூறியதாவது: பொதுமக்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி தமிழக முதல்வர் செய்படுத்தி வருகிறார். அதன்படி புதுக்கோட்டை நகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கைகள்  நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

 அதனடிப்படையில்,  புதுக்கோட்டை நகராட்சியில்  நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ்  ரூ.1.80 கோடி மதிப்பிலான புதிய மேனிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு  அடிக்கல் நாட்டப்பட்டது. 

புதிதாக கட்டப்படவுள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். இதன் சிறப்பு என்னவெனில் கட்டப்படும் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் குழாய் மூலம் நிரப்படும் காவிர் குடிநீர் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும். இதனால்  புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 22 வார்டுகளைச் சர்ந்த 10,000 பொதுமக்கள் குடிநீர் வசதி பெறுவார்கள். 

புதுக்கோட்டை நகராட்சியிலுள்ள அனைத்து சாலைகளையும் புதிதாக அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோன்று  பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட வசதிகளை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி எதிர்புறம் 10 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய  பூங்கா அமைக்கப்பட உள்ளது.   இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு உயர்தரமான மருத்துவ சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

 பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். இதில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பா.ஆறுமுகம், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொ) ஜீவா சுப்பிரமணியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் கே.ஆர்.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

Top