logo
ராட்டை சுற்றி பாளையம் பகுதியில் உள்ள மது கடைகளை அகற்றக் கூடாது: ஈரோடு ஆட்சியரிடம் மனு அளித்த தொழிலாளர்கள்

ராட்டை சுற்றி பாளையம் பகுதியில் உள்ள மது கடைகளை அகற்றக் கூடாது: ஈரோடு ஆட்சியரிடம் மனு அளித்த தொழிலாளர்கள்

01/Dec/2020 11:46:16

ஈரோடு: ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு  ராட்டை சுற்றிபாளையம் ,ராசாம்பாளையம், சென்னிமலை பாளையம்,சின்ன குளம், திருமங்கலம் ஏரிக்கரைக்கு  உட்பட பகுதியைச் சேர்ந்த 50 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு வந்து அங்குள்ள புகார் பெட்டியில் மனு போட்டனர்.

அந்த மனுவில்  அவர்கள் கூறியிருப்பதாவது: நாங்கள் மேற்கண்ட ஊர்களில் வசித்து வருகிறோம்.இந்தப் பகுதியில் கட்டிட தொழிலாளர்கள் விவசாய கூலித்தொழிலாளி மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் பனை ஏறும் தொழிலாளர்கள் காட்டு வேலை செய்பவர்கள் கூலி வேலை செய்பவர்கள் என பலதரப்பட்ட தொழிலாளர்கள் வசித்து வரும். எங்கள் வேலை களைப்பு தெரியாமல் இருக்க நாங்கள் மது அருந்துவோம்.

இதனால் ராட்டை சுற்றி


பாளையத்தில் நாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மதுபானக்கடைவைக்க  அதிகாரிகள் ஆய்வு செய்து இது மது கடை வைத்துள்ளனர். இந்த கடையை விட்டால் நாங்கள் சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று தான் மது குடிக்க வேண்டும் அப்படி அதிக தொலைவுக்கு  செல்லும் போது எங்களுக்கு பெட்ரோல் செலவும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.  கடையை சுற்றி தென்னந்தோப்பு தான் உள்ளது. 


இந்த பகுதியில் உள்ள கோவிலுக்கும் டாஸ்மாக் கடைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. நாங்கள் அந்தக் கடையில் தினமும் 500 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மது அருந்தி வருகிறோம்.சிலர் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர்.  ஒரு வேளை இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவதாக இருந்தால் அதற்கு முன்னதாக  இதே பகுதியில்  ஒரு டாஸ்மாக் கடையை திறந்த பிறகே கடையை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர். 


Top