logo
ஸ்டான் ஸ்வாமி மரணத்தை கண்டித்து புதுக்கோட்டை சிபிஎம் சார்பில்  ஆர்ப்பாட்டம்

ஸ்டான் ஸ்வாமி மரணத்தை கண்டித்து புதுக்கோட்டை சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்

08/Jul/2021 08:18:55

புதுக்கோட்டை, ஜூலை: பழங்குடி மக்களின் போராளி ஸ்டான் ஸ்வாமி சிறை மரணத்துக்கு காரணமான ஒன்றிய அரசு மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியவற்றை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிபிஎம் மாவட்ட செயலர் எஸ். கவிவர்மன் தலைமை வகித்தார்.

நிர்வாகி நாராயணன் தொடக்கி வைத்து பேசினார்.  நிர்வாகிகள் அன்புமணவாளன்,  நாகராஜன்,டி.சலோமி, சி. அடைக்கலசாமி ஆகியோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டனடித்தும், ஸ்டான் ஸ்வாமி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர். 

 மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். சங்கர் நிறைவுரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் செங்கொடி ஏந்தி திரளானோர் பங்கேற்று முழக்கமிட்டனர்.

Top