logo
தமிழ் மாநில கட்சி 7-ஆம் ஆண்டு தொடக்க விழாச  ஈரோட்டில் கட்சியினர் கொண்டாட்டம்

தமிழ் மாநில கட்சி 7-ஆம் ஆண்டு தொடக்க விழாச ஈரோட்டில் கட்சியினர் கொண்டாட்டம்

29/Nov/2020 06:36:47

ஈரோடு: தமிழ் மாநில கட்சியின் 7-ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி ஈரோட்டில் அக்கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில, அக்கட்சியின் 7-ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

மேலும், முன்னாள் முதல்வர் காமராஜர் மற்றும் மூப்பனார்  உருவப்படங்களுக்கும்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் ஆறுமுகம், மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா, பொதுசெயலாளர் விடியல் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாய அணி மாவட்ட தலைவர் சம்பத்குமார், இளைஞர் அணி மாவட்ட தலைவர் ரமேஷ், மண்டல தலைவர்கள் மணியன், சின்னச்சாமி, வட்டார தலைவா் புவனேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Top