logo
தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான அகில இந்திய தொழில்  தேர்வுகள் ஒத்திவைப்பு

தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான அகில இந்திய தொழில் தேர்வுகள் ஒத்திவைப்பு

27/Nov/2020 09:18:52

புதுக்கோட்டை:  இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:

தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான அகில இந்திய தொழிற்தேர்வு நவ. 25, 26, 27  ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த Trade Practical for All Trades (under Annual / DST pattern - for trainees of 1 year duration trades admitted in Aug-2019 session and trainees of supplementary exam admitted in Aug 2018 session)  தேர்வுகள்  நிவர் புயல் காரணமாக 03.12.2020(வியாழன்), 04.12.2020(வெள்ளி ), 05.12.2020(சனி) ஆகிய தேதிகளுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 25.11.2020 முற்பகலில்  நடைபெற இருந்த  Paper III - engineering Drawing) (Supplementary for the trainees of IV SEMESTER-  தேர்வு  வரும்  03.12.2020 (வியாழன்) முற்பகலிலும் நடைபெறுகிறது என அதில் தெரிவித்துள்ளார்.


Top