logo
குடும்ப கட்சிக்கும் – சாமானியர்களின் கட்சிக்குமான தேர்தல்: ஆலோசனைக்கூட்டத்தில் அதிமுக அமைச்சர்கள் பேச்சு

குடும்ப கட்சிக்கும் – சாமானியர்களின் கட்சிக்குமான தேர்தல்: ஆலோசனைக்கூட்டத்தில் அதிமுக அமைச்சர்கள் பேச்சு

20/Mar/2021 09:54:59

ஈரோடு, மார்ச்: தற்போது நடைபெறும் தேர்தல் குடும்ப கட்சிக்கும் – சாமானியர்களின் கட்சிக்கும் இடையேயான  தேர்தல் என்று அமைச்சர்கள் தங்கமணி மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் தெரிவித்தனர்.

 ஆலோசனைக்கூட்டத்தில் அதிமுக அமைச்சர்கள் பேச்சுஈரோட்டில் மேற்கு தொகுதி வேட்பாளர் கே.வி.ராமலிங்கம், கிழக்கு தொகுதி வேட்பாளர் எம்.யுவராஜா பங்கேற்ற அதிமுக கூட்டணி கட்சியினரின் ஆலோசனைக்கூட்டத்தில்  மின்சார துறை அமைச்சர் தங்கமணி பேசுகையில்,

அதிமுக கூட்டணி கட்சியினர், வேட்பாளர்களை பார்க்காமல் அதிமுக அரசு மீண்டும்  அமையும் வகையில் வெற்றிக்காக உழைக்க வேண்டும். இத்தேர்தல் குடும்ப கட்சிக்கும், சாமானிய கட்சிக்கும் நடப்பதாகும். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் போது, திமுக கட்சி காணாமல் போகும். இந்த ஆட்சிக்கு மக்களிடம் மட்டுமின்றி, எதிர் கட்சியினரிடம் கூட வரவேற்பு இருப்பதை காண முடிகிறது.

ஒவ்வொரு வீட்டிலும் உள்ள வாக்காளர்களிடம் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை விளக்கி, ஓட்டுப்போட செய்யுங்கள். நமது ஒற்றுமையான பணியின் மூலமே, திமுக வை அகற்றி, தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியை தொடர செய்ய முடியும் என்றார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், மதம் சார்ந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம் என கூறுகின்றனர். பாதுகாப்பான இந்தியாவை உருவாக்கியவர் களுடன் கூட்டணியில் உள்ளோம், என்பதை மக்களிடம் விளக்குங்கள். மாநில அரசுகள், மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து இருந்தால்தான், மாநில வளர்ச்சிக்கான திட்டங்கள், நிதி, வளர்ச்சிப்பணிகளை செய்ய முடியும்.

இதன் மூலமே, இந்தியாவில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. நமது தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கான திட்டம், ரேஷன் கடைகளுக்கான திட்டம் போன்றவைகளை மக்களிடம் எடுத்து கூறுங்கள். வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற  வேண்டும் என்றார்.

Top