logo
புதுக்கோட்டை தொகுதிக்குள்பட்ட ஆதனக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் கார்த்திக்தொண்டைமான் பிரசாரம்

புதுக்கோட்டை தொகுதிக்குள்பட்ட ஆதனக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் கார்த்திக்தொண்டைமான் பிரசாரம்

23/Mar/2021 02:07:13

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின்  அதிமுக வேட்பாளர் வீ.ஆர்.கார்த்திக் தொண்டைமான் தமிழக அரசின் சாதனைகளை விளக்கிக்கூறி  பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

அதிமுக சார்பில்  புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வீ.ஆர்.கார்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை தொகுதிக்குள்பட்ட ஆதனக்கோட்டை பகுதியில் தமிழக அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்து பேசுகையில், ஆதனக்கோட்டை  பகுதியில் முந்திரி தொழிற்சாலை அமைப்பதற்கு எடப்பாடி தலைமையிலான அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அதற்கு அதிமுக அரசு மீண்டும் ஆட்சியமைக்க வாக்களிக்க வேண்டும் என்றார்.

இதில்,பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த  தலைவர்கள், உறுப்பினர்கள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Top