logo
வேளாண் சட்டத்தை எதிர்த்து தலைநகர் தில்லி நோக்கிச் சென்ற விவசாயிகள் மீது தடியடி

வேளாண் சட்டத்தை எதிர்த்து தலைநகர் தில்லி நோக்கிச் சென்ற விவசாயிகள் மீது தடியடி

26/Nov/2020 10:24:30

புதுதில்லி: தலைநகர் தில்லியை நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது தடியடி நடத்தியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பஞ்சாப் ஹரியான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் டெல்லியை நோக்கி பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது.

மாநிலத்தில் விவசாயிகளின் போராட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், சில முக்கிய சாலைகளில் போக்குவரத்தைத் தடுத்து வைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு டெல்லியை நோக்கிச் சென்றனர். அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விவசாயிகள் போரிகேட்டுகளை பாலத்திலிருந்து கீழே தூக்கி வீசினர். போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை விவசாயிகள் மீது வீசினர்.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும், தொலைக் காட்சிகளிலும் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கற்கள் மற்றும் தடிகளை வீசி, விவசாயிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை அடுத்து போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீச்சியடித்தும் விவசாயிகளை விரட்டியடித்தனர்.

Top