logo
ஈரோடு மாவட்டத்தில்   2,215 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் 2,215 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்

21/Nov/2020 06:44:31

ஈரோடு: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஈரோட்டில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சி. கதிரவன் ஈரோடு மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இதன்படி ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர், பெருந்துறை ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளை  உள்ளடக்கிய ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 19 லட்சத்து 16 ஆயிரத்து 809 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 36 ஆயிரத்து 22 பேரும், பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 80 ஆயிரத்து 414 பேரும், இதர வாக்காளர்கள் 95 பேரும் அடங்குவர்.

இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் உட்பட பணிகளுக்காக இன்றும் (சனிக்கிழமை) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அதேபோன்று அடுத்த மாதம் 12, 13-ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தபடி, இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும்  சிறப்பு முகாம் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், ஈரோடு மாநகராட்சி அலுவலகம் போன்றவைகளில் உள்ள தேர்தல் பிரிவு உள்பட மாவட்டம் முழுவதும் 2,215 ஓ வாக்குச்சாவடிகளில்  வாக்காளர்கள் சிறப்பு முகாம் நடந்தது. புதிய வாக்காளர் சேர்க்கைக்கு படிவம்–6, நீக்கத்துக்கு படிவம்–7, திருத்தம் செய்ய படிவம் – 8, இடமாற்றம் செய்ய படிவம் – 8ஏ ஆகியவற்றில் விண்ணப்பம் செய்யலாம் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இப்படிவங்களை, www.elections.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிய வாக்காளர் சேர்க்கைக்கு முகவரி சான்றாக ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், காஸ் பில், தண்ணீர் வரி ரசீது, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு நகல் எடுத்து வர வேண்டும்.  என்றும் வயது சான்றாக, பிறப்பு சான்று, பள்ளி மாற்று சான்று, பான் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், கிசான் கார்டு நகல் எடுத்து செல்ல வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாம் களில் பெண்கள் அதிகளவு ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு வாக்காளர் முகாமை கலெக்டர் சி. கதிரவன் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து நாளையும் சிறப்பு வாக்காளர் முகாம் நடைபெற உள்ளது. 


Top