logo
தேர்தல்  பறக்கும்படை சோதனை வாபஸ்: பணம், நகை எடுத்துச் செல்லக் கட்டுப்பாடுகள் நீங்கியதால் வியாபாரிகள் நிம்மதி

தேர்தல் பறக்கும்படை சோதனை வாபஸ்: பணம், நகை எடுத்துச் செல்லக் கட்டுப்பாடுகள் நீங்கியதால் வியாபாரிகள் நிம்மதி

09/Apr/2021 06:48:59

ஈரோடு, ஏப்: சட்டமன்றத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும்படை கண்காணிக்கு விலக்கிக்கொள்ளப்பட்டதால்  பலதரபப்ட்ட வியாபாரிகள் நிம்மதியடைந்தனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வந்தனர். ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர், வீடியோ குழுவினர், போலீசார் என சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாள் முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. ரூ .50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரொக்கத் தை பறக்கும் படையினர் ஆங்காங்கே  பறிமுதல் அந்த  தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரி டம் ஒப்படைத்தனர். 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8  சட்டமன்ற தொகுதிகளிலும் ரூ. 2 கோடியே 31 லட்சத்து 39 ஆயிரத்து 938 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணங்கள் காட்டியதால் ரூ.1 கோடியே 58 லட்சத்து 63 ஆயிரத்து 230 ரூபாய் உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. மீதி 72 லட்சத்து 76 ஆயிரத்து 708 ரூபாய் கருவூலத்தில் வைக்கப் பட்டுள்ளது. ஈரோடு மாவட் டம் முழுவதும் மொத்தம் 128 பேரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 77 பேரிடம் பணம் திரும்ப படைக்கப்பட்டுள்ளது. மீதம் 51 பேரின்  பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட் டுள்ளது. 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் ஈரோடு மாவட்டத்தில் கருங்கல்பாளை யம் மாட்டுச் சந்தை ஜவுளி சந்தை மஞ்சள் ஏலம் போன்றவற்றில் பங்கேற்க வியாபாரிகள் தயக்கம் காட்டி வந்தனர். இதனால் மாட்டு சந்தை, ஜவுளி சந்தையில் வெளி மாநில  வியாபா ரிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

வியாபாரமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிந்த மறுநாள் முதல் அதாவது ஏப்ரல் 7 -முதல் பறக்கும் படை சோதனை விலக்கிக் கொள்ளப்பட்டது. ரூ 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சொல்ல எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அதைப்போல் ஆவணங்கள் வைத்திருக்க வேண்டிய நிபந்தனையும் விலக்கிக் கொள்ளப்பட்டது. கட்டுப்பாடுகள் நீங்கியதால் வணிகர்களும் பொதுமக்களும்  நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தனர். 

Top