logo
முன்னோடித் தமிழ்ப் பதிப்பாளரும், க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான க்ரியா ராமகிருஷ்ணன் இன்று காலமானார்.

முன்னோடித் தமிழ்ப் பதிப்பாளரும், க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான க்ரியா ராமகிருஷ்ணன் இன்று காலமானார்.

17/Nov/2020 10:24:50

சென்னை: பதிப்புலக ஆளுமை என்று கூறப்படும் க்ரியா ராமகிருஷ்ணன்(76), கொரோனா பாதித்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(17.11.2020) காலை காலமானார்.

க்ரியா பதிப்பகம் மூலம் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி உள்ளிட்ட பல புத்தகங்களை பதிப்பித்தவர். புத்தகப் பதிப்புத் துறையில் பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தியவர். இத்துறையின் முன்னோடியாகவும் விளங்கியவர் க்ரியா ராமகிருஷ்ணன்.

மேலும், ந.முத்துசாமியுடன் இணைந்து கூத்துப்பட்டறை ஆரம்பித்தது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  மொழிக்காக இயங்கும் மொழி அறக்கட்டளையையும் உருவாக்கியவர் க்ரியா ராமகிருஷ்ணன். இவரது மறைவு பதிப்புலகத்துக்கு மாபெரும் இழப்பு என்றால் மிகையில்லை.

Top