logo
2-ஆம் நிலை காவலர் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு: இணையவழியில் இலவசப் பயிற்சி

2-ஆம் நிலை காவலர் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு: இணையவழியில் இலவசப் பயிற்சி

02/Oct/2020 11:13:49

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவசப் பயிற்சி இணையவழியில் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தன்னார்வப் பயிலும் வட்டத்தின் சார்பில், வரும் டிச. 13- ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்  தேர்வுக்கான பயிற்சிகள் வரும் (அக். 5) திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளன. பாடக்குறிப்புகளும், மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்படும். இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 04322 222287 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி  தகவல் தெரிவித்துள்ளார்

Top