14/Nov/2020 09:34:03
புதுக்கோட்டை: தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு குழந்தைகள், மாணவர்கள், வாசகர்கள் ஆகியோருக்கு கதை சொல்லுதல், கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இது குறித்து, மாவட்ட மைய நூலகர் கி.சகிகலா வெளியிட்ட தகவல்: தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு குழந்தைகள், மாணவர்கள், வாசகர்கள் ஆகியோருக்கு கதை சொல்லுதல், கட்டுரைப்போட்டிகள் நடத்தப்படுகின்றன்.
அதில்,கதை சொல்லும் போட்டியில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும், 5 நிமிடங்களுக்குள் தான் சொல்ல விரும்பும் கதையை வீடியோவாக பதிவு செய்து 18-ம் தேதி மாலை 5 மணிக்குள் 9965748300 - 9894052850 ஆகிய வாட்ஸ்அப் எண்களுக்கு அனுப்ப வேண்டும். அதனுடன் குழந்தையின் பெயர், பிறந்த தேதி, வகுப்பு மற்றும் வீட்டு முகவரியை தவறாமல் குறிப்பிட வேண்டும். தேர்வு செய்யப்படும் முதல் 3 இடங்களை பெறும் மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
கட்டுரைப்போட்டி 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கொரோனா ஊரடங்கில் நான் வாசித்த சிறந்த நூல் என்ற தலைப்பிலும், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வாசிப்பை நேசித்தேன் என்ற தலைப்பிலும், வாசகர்களுக்கு என் சிந்தனையை செழுமையாக்கிய நூல்கள் என்ற தலைப்பிலும் நடைபெறும்.
கட்டுரை ஒரு பக்கத்திற்கு 20 வரிகளுக்கு குறையாமலும், 6 பக்கங்களுக்கு மிகாமல் தமிழில் எழுதி 18-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெயர், வகுப்பு, பிறந்த தேதி, செல்போன் எண் மற்றும் முழு முகவரியுடன் நூலகர், மாவட்ட மைய நூலகம், எண்.104 , மேல 4-ஆம் வீதி, புதுக்கோட்டை-622 001 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்பலாம்.
கட்டுரைப்போட்டியில் பங்கு பெற்ற மூன்று பிரிவுகளிலும் முதல் 10 இடங்கள் பெற்றவர்களுக்கு 21.11.2020-ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்ட மைய நூலகத்தில் நேர்காணல் நடைபெறும். அதில் முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு பரிசும், சான்றிதழ் வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு, புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தை 04322-223484, 9965748300 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.