13/Nov/2020 09:15:36
புதுக்கோட்டை:புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் 7 மாதங்களுக்குப்பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் (கூ.பொ) டி.பக்கிரிசாமி வெளியிட்ட தகவல்:
கொவைட்-19, நோய்த் தொற்று காரணமாக சுமார் 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு அருங்காட்சியகம் அரசு ஆணையின்படி தற்போது பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் அரசு அறிவித்த புதிய தளர்வுகளுடன் பொது மக்களுக்கு இவ்வருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அரசு அறிவுறுத்தலின்படி, அருங்காட்சியகத்தைப் பார்வையிட வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். அரசு அருங்காட்சியத்தை பொதுமக்கள் தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம். ஒவ்வொரு வெள்ளி, மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் அரசு அருங்காட்சியகத்திற்கு விடுமுறையாகும். உரிய நுழைவுக் கட்டணத்தை செலுத்தி அரசு அருங்காட்சியகத்தை பார்வையிடலாம்.