logo
ஈரோட்டில்  தலைக்கவசம்  அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிப்பு:போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

ஈரோட்டில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிப்பு:போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

02/Mar/2021 09:19:10

ஈரோடு, மார்ச்: ஈரோடு மேட்டூர் ரோடு, முனிசிபல் காலனி,சத்தி சாலை, மூலப்பட்டறை எல்ல மாரியம்மன் கோயில் போன்ற பகுதிகளில்   ஈரோடு வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

 அப்போது இந்தப் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். 

மேலும் அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி அனைவரிடமும்   ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று  குறித்து  தணிக்கையில் ஈடுபட்டனர்.  இதில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் தலைக்கவசம்  அணியாமல் வந்தனர். அவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப் பட்டது. மேலும் தலைக்கவசத்தின்  அவசியம்  குறித்து  அறிவுறுத்தப்பட்டது. மேலும் போக்குவரத்து பணியில் ஈடுபட்ட  போலீசாருக்கு எலுமிச்சை சாறு வழங்கப்பட்டது.

Top