27/Nov/2020 10:08:01
புதுக்கோட்டை: புதுக்கோட்டையிலிருந்து காரையூரி சென்ற ஆம்னி வேனில் புகை வந்த அச்சத்சால் ஓடும் வண்டியிலிருந்து கீழே குதித்த வியாபாரி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியைச் சேர்ந்தவர் ஒலியுல்லா மகன் நத்தர் ஜாகித் (18). சமோசா வியாபாரியான இவர், வியாபாரத்துக்காக காரையூருக்கு மாருதி ஆம்னி ல் வந்துள்ளார். சித்தூர் பாலம் அருகே சென்ற போது மாருதி வேனில் புகை வந்ததாம்.
இதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்த நத்தர்ஜாகித் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓடும் வண்டியிலிருந்து கீழே குதித்தாராம். இதில் பலத்த காயமடைந்த நத்தர் ஜாகித் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை அவியுல்லா காரையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.