logo
செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்களை பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும்

செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்களை பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும்

13/Nov/2020 07:25:53

புதுக்கோட்டை:   புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்கள் பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்கள் மற்றும் நாய் இனங்களை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும் நிலையங்களை பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்திட வேண்டும். அதன்பின்னரே செயல்பட அனுமதிக்கப்படும்.  எனவே விண்ணப்ப படிவத்தினை https://www.tn.gov.in என்ற இணைய தளத்தில் Animal Husbandry Department  தளத்தில்  Rules and Regulations  உட்பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

பொது அறிவிப்பு செய்த தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், திரும்பப் பெற இயலாத ரூ.5000- க்கான வங்கி வரைவோலையினை Member Secretary, Tamil Nadu Animal Welfare Board என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து  தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் இயக்குநா; அலுவலகம், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள், 571 அண்ணாசாலை, கால்நடை மருத்துவமனை வளாகம், நந்தனம், சென்னை-35 என்ற முகவரிக்கு மேற்காணும் நிலைய உரிமையாளர்கள் விண்ணப்பங்களை அனுப்பி தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

Top