logo
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படஉள்ளது

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படஉள்ளது

13/Nov/2020 06:52:05

புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுகத்தில் உள்ள பல்வேறு வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட உள்ளதாக  வட்டார போக்குவரத்து அலுவலர் சி.கே.ஜெயதேவ்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார். 

போக்குவரத்து துறையில் வரி கட்டாதது மற்றும் இதர குற்றங்களுக்காக பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் சிறைபிடிக்கப்பட்டு வாகன உரிமையாளர்கள் மற்றும் நிதியாளர்களால் நீண்டகாலமாக விடுவிக்கப்படாமல் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல்வேறு வாகனங்களை தற்போது உள்ள நிலையிலேயே போக்குவரத்து ஆணையரின் த்தரவின் படி பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பொது ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் டேவணித் தொகையாக ரூ.10,000-க்கான வங்கி வரைவினை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்  புதுக்கோட்டை ((Payable at Regional Transport Office, Pudukkottai) என்ற பெயரில் செலுத்தத் தக்கதாக எடுத்து 4.12.2020 -ஆம் தேதிக்குள் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் பகல் 12 மணிக்குள் சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. டேவணித் தொகை செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் அனுமதிக்கப்படுவர் ஏலத் தேதி டேவணித் தொகை செலுத்துபவர்களுக்கு தனியே தெரிவிக்கப்படும்.

புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு அனுமதி சீட்டில்லா  வாகனம், 5 சரக்கு வாகனம், 6 ஆட்டோ ரிக்சா 1 மேக்சி கேப் என மொத்தம் 13 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது.

எனவே, வாகனங்கள் பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோர் புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அலுவலக வேலை நாட்களில் காலை 11மணி முதல் 5 மணி வரை பார்வையிடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Top