logo
கோபி தொகுதியில் 128 பேருக்கு தாலிக்குத்தங்கம் அளித்தார் அமைச்சர் செங்கோட்டையன்

கோபி தொகுதியில் 128 பேருக்கு தாலிக்குத்தங்கம் அளித்தார் அமைச்சர் செங்கோட்டையன்

06/Feb/2021 10:21:59

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட நம்பியூரில் சமூகநலத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில்  நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் அரசு விழாவில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 128 பயனாளிகளுக்கு தாலிக்கு  தங்கமும் 240 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும்  வழங்கினார்


பின்னர் விழாவில் அமைச்சர் பேசியதாவது: 8 கிராம் தங்கத்தின் விலை நிதிகள் ஒதுக்கிய போது ரூ.32 ஆயிரமாக இருந்தது தற்போது ரூ.36 ஆயிரம் விலையாக உள்ளது. தங்கத்தின் விலை தொடார்ந்து ஏற்றமடைந்து வருதவாதல் தான் நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் கட்டப்பட்ட அனைத்து வீடுகளையும் புதுப்பிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப்பட்டாக்களை நிரந்தர பட்டாக்களாக மாற்றம் செய்ய அரசு நடவடிகை எடுத்துவருகிறது.நாங்கள் சொன்னதால் தான் அரசு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று  சில பேர் சொல்லுகிறார்கள். ஆனால் இன்று விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளது. மனிதநேயத்துடன் அரசு செயல்படு கிறது. பொங்கல் பரிசு ரூ.2500 வழங்கவேண்டும் என அவர்கள் சொல்லவில்லையே. நாங்கள் செய்துள்ளோம். 

ஆட்சியில் இருக்கும் நாங்கள்  மட்டுமே செய்ய முடியும். தேர்தல் களத்தில் அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கலாம் ஆனால் செயல்படுத்த முடியாது. வாக்குகளை மக்களிடம் ஏமாற்றி வாங்கவே அவர்கள் பொய்யான பிரசாரம் மேற்கொண்டள்ளனர். தேர்தலுக்கு முன்பே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் களத்தில் சொன்னார்கள் அத்திக்கடவு- அவிநாசி திட்டம் கொண்டுவர முடியாது என்று ஆனால் தற்பேது நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 

அரசுக்கு 18 ஆயிரம் கோடி நிதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள போதும் மக்களுக்கான திட்டங்களை அரசு செயல்படுத்திவருகிறது. அரசு செய்யும் பல்வேறு பணிகளை மக்களுக்ளுக்கு எடுத்துச்செல்லுங்கள் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.  இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, கோட்டாட்சியர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Top